தமிழ் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை அன்று மாதந்தோறும் அன்னதானம் நடைபெறுகிறது

அன்னதானம் செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்

+91 97 87 97 95 84

+91 97 86 76 75 60

அன்னதானம் உபயம்

தேதி தமிழ் மாதம் கிழமை உபயம் ஊர்

உயர்வான வாழ்வு தருவார் சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை

சிறுமளஞ்சி சுடலை ஆண்டவர் வரலாறு

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இருந்து வள்ளியூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ( 1 ) கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோயில்.

காவல் தெய்வங்களில் முதன்மையானவராக கருதப்படும் சுடலைமாடன் லிங்க வடிவில் சுயம்புவாக மூவாற்றங்கரையினிலே சீவலப்பேரியிலே தோன்றினார். அடைபட்ட சிமிழாய், அய்யன் திருக்கோட்டியப்பரால் அடையாளம் காட்டப்பட்டார் ஊர்க்காட்டில், தாமிரபரணியிலே வாடிய மலர்மாலையாய் வந்து சிறுவர்களிடத்தில் திருவிளையாடல் நிகழ்த்தி இரட்டை சுடலையாய் மேல கோயிலிலும், வேப்ப மரத்தின் அடியில் ஓங்கி உயர்ந்த புற்றாய் வேம்படிமாடனாய் கீழக் கோயிலிலும் ஆறுமுகமங்கலத்தில் எழுந்தருளினார்.

பக்தனுக்காக கோர்ட்டில் சாட்சியும் கூறி, ஐகோர்ட் மகாராசாவாக அழைக்கப்பட்டார். வாங்கிய மாடுகளுக்கு கொடுக்காத பணத்தை கொடுத்ததாக பொய் சத்தியம் செய்ததால், மாடுகளுடன் வந்து பொய் சத்தியம் செய்தவரை பழி தீர்த்து தான் யார் என்பதை காட்ட ஒத்தப்பனையில் காட்சி கொடுத்தார் விஜயநாராயணத்தில். ஓரினத்தானுக்குள் உருவான பகைக்காக பொய் சத்தியம் செய்ததால் ஒத்தப்பனை உயரத்திற்கு ஒளியாய் ஜொலித்தார் சிறுமளஞ்சியிலே. நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் ஏர்வாடி அருகே நம்பி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது இயற்கை வளமான கிராமம் திருவேங்கிடநாதபுரம் என்ற சிறுமளஞ்சி. இங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த இருளப்பன் நாடார் என்பவருக்கும் அருகேயுள்ள கிராமமான அணைக்கரையைச் சேர்ந்த வெள்ளையன் நாடாருக்கும் பனை மரங்களை குத்தகைக்கு எடுப்பதில் தகராறு இருந்து வந்தது.

Read More